1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (12:08 IST)

அரசு விழாவாகும் ராஜேந்திர சோழன் பிறந்தநாள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட ராஜேந்திரசோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது மற்றும் பரிசு பணத்தை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்க உள்ளார்.

இந்நிலையில் தஞ்சை ஆண்ட மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.