1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (09:59 IST)

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு! – முதல்வர் விருது!

ஆண்டுதோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவற்றிற்கு முதல்வர் விருது வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சி, நகராட்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுசூழல், வாழ்க்கை முறை, பொருளாதார சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு இந்த விருதுக்கு மாநகராட்சி, நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளாக உதகை, திருசெங்கோடு, சின்னமனூர் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான விருது மற்றும் பரிசு பணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று வழங்க உள்ளார்.