1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (22:19 IST)

கேபிள் டிவி மூலம் இனிமேல் ஓடிடி ..?

ஓடிடி தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் என்.சிவக்குமார்  தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இதனால் தமிழ். திரைப்படத்துறைக்கு எந்த பயனும் இல்லை..  திரைத்துறையினர் அனைவரும் பயன்படும் வகையிலும் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கவும், மக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து படங்களும் பார்க்கவும் திட்டம் இருக்கிறது.. அரசு அழைத்தால் கண்டிப்பாக விளக்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.