வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (07:53 IST)

வீட்டுக்குள் இருந்தாலும் யார் யார் மாஸ்க் அணிய வேண்டுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்

கொரோனா வைரஸ் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சென்னையில் உள்ள ஒரு சில பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற ஒரு செய்தி பரவி வருகிறது
 
குறிப்பாக சென்னையில் உள்ள அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், கோட்டூர்புரம், ஆலந்தூர் மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே சென்றாலும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற செய்தி பரவி வருகிறது
 
ஆனால் இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சென்னை மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றும் சமீபத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்துக்கு சென்று திரும்பியவர்கள் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என்றும் மேலும் கொரோனா அறிகுறி இருப்பதாக யாராவது சந்தேகப்பட்டால் அவர்களும் மாஸ்க் அணிந்து கொள்ளலாம் என்றும் மற்றபடி அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்தே சென்னையில் மிக வேகமாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது