கமல் வீட்டில் மாநகராட்சியால் ஒட்டிய போஸ்டர் – உருவானது புதிய சர்ச்சை !

Last Modified சனி, 28 மார்ச் 2020 (10:07 IST)

நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் வீட்டின் முன் மாநகராட்சி ஒட்டியுள்ள தனிமைப் படுத்தப்படுத்தப்பட்ட போஸ்டரால் சர்ச்சை உருவாகியுள்ளது.

தமிழ்கத்தில் கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கோரொனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்காப் பட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற போஸ்டர் இப்போது ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுபோன்ற ஒரு போஸ்டர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளதால சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த போஸ்டர் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளில்தான் ஒட்டப்படும். ஆனால் கமல், வெளிநாடுகளுக்கு எதுவும் சென்று திரும்பவில்லை என்பதால் அந்த போஸ்டர் உண்மையாகவே மாநகராட்சி நிர்வாகம்தான் ஒட்டியதா என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :