வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (10:38 IST)

கமல் வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் திடீர் அகற்றம்

கமல் வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் திடீர் அகற்றம்
உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் சில நிமிடங்களுக்கு முன்னால் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் கொரோனா குறித்த ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்த ஸ்டிக்கர் குறித்து கமல்ஹாசன் தரப்பில் விளக்கம் அளித்தபோது ’கொரோனா வந்தவர்களுக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர் அல்ல இது என்றும் எங்களை நாங்களே பாதுகாத்து கொண்டு இருக்கிறோம், மற்றவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கூறும் மாநகராட்சியுடன் ஸ்டிக்கர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது 
 
இருப்பினும் கமலஹாசனுக்கு ஸ்டிக்கர் பரவியதாக மிக வேகமாக வதந்திகள் பரவியதை அடுத்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர மாநகராட்சி ஊழியர்கள் சற்று முன்னர் கமல் வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை நீக்கினார்கள். இதனால் ஒரு சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டு தற்போது அந்த பரபரப்பு அடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது