வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (13:53 IST)

இனி பாட்டில்களில் பெட்ரோல் கிடையாது – தமிழகம், தெலங்கானாவில் அதிரடி !

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி எரித்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதிரடியான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். சடலத்தை எரிக்க அவர்கள் பங்குக்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு தெலங்கானா அரசு பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்கக்கூடாது டிசம்பர் 3 ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்திலும் இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. இதைச் செயல்படுத்தும் விதமாக பங்குகளில் பாட்டில்களில் இனி பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்ற வாசகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.