எத்தனை பாட்டில்டா சாமி...பப்பில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட யாஷிகா!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது பிக்பாஸ் நண்பர் மஹத்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு நண்பர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டிகளில் பங்கேற்று குடி கும்மாளம் என ஆட்டம் போட்டு வருவதையெல்லாம் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருவார். அந்தவகையில் தற்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பப்பில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் யாஷிகா அமர்ந்திருக்கும் டேபிள் முழுவதும் அடுக்கடுக்காக மது பாட்டில்கள் இருக்கிறது.