1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 மே 2022 (19:34 IST)

பிற வாகனங்களில் G,அ எழுத்துகள் இருந்தால் நடவடிக்கை : அதிரடி அறிவிப்பு

Gvehicles
பிற வாகனங்களில் G,அ எழுத்துகள் இருந்தால் நடவடிக்கை : அதிரடி அறிவிப்பு
அரசு வாகனங்கள் தவிர பிற வாகனங்களில் ஜி என்ற எழுத்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது
 
அரசு அலுவலகங்கள் அல்லாத ஒரு சில வாகனங்களில் ஜி அல்லது அ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருப்பதாக ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளது
 
இதனை அடுத்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் ஜி அல்லது அ என்ற எழுத்துக்கள் பதிவு செய்யக் கூடாது என்றும் அவ்வாறு பதிவு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது