1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain for next 5 days

தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை!

தமிழகம்
தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்வரும் 15 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்.

 
வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக தற்போது தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இதனால் அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
 
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யதது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்வரும் 15 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பொங்கலில் கரப்பான் பூச்சி... சிக்கலில் பிரபல ஹோட்டல்!