திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

19வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி

சென்னையில் 19வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதால் பொதுமக்கள் தான் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில வாரங்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடப்பட்டது
 
கடந்த 18 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் குறைய வேண்டும் என்றும் ஆனால் குறையாதது அதிர்ச்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.49 என்பதும், டீசல் விலை ரூ.94.39 என்பதும் குறிப்பிடத்தக்கது,