புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (18:55 IST)

ரஃபேல் புத்தகம் தடை நீக்கம்: திட்டமிட்டபடி விழா நடைபெறும் என தகவல்

எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய ரஃபேல் ஊழல் குறித்த புத்தகம் இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த புத்தகத்தை இந்து என்.ராம் அவர்கள் வெளியிட இருந்தார். இந்த புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவிருந்த நிலையில் திடீரென இந்த புத்தகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்தது. 
 
இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவு இன்றி பதிப்பகத்தில் இருந்த ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படையினர்களின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினர்களும் கண்டங்கள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் புத்தகங்களை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என்றும் உடனடியாக பறிமுதல் செய்த புத்தகங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி பறிமுதல் செய்த புத்தகங்கள் தற்போது திருப்பி ஒப்படைக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" புத்தக வெளியீட்டு விழாவிற்கு விதிக்கப்பட்ட தடை சற்றுமுன் நீங்கியது. இதனால் திட்டமிட்டபடி இன்று மாலை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தில் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என பதிப்பகத்தார் தகவல் அளித்துள்ளனர்.