வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (18:17 IST)

பறிமுதல் செய்த புத்தகங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவு!

பறிமுதல் செய்த புத்தகங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவு!
ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்ததுடன் இதுகுறித்து உடனடியாக அறிக்கை தர வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரபேல் தொடர்பான புத்தகங்களை திருப்பி ஒப்படைக்க தலைமை தேர்தல் அதிகாரி சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
வட்டார தேர்தல் பறக்கும் படை அதிகாரியே புத்தங்களை பறிமுதல் செய்ததாக சாகு மேலும் விளக்கம் அளித்துள்ளார். எனவே இன்னும் சில நிமிடங்களில் பறிமுதல் செய்த புத்தகம் திருப்பி ஒப்படைக்கப்படும் என தெரிகிறது