கட்சி கொடி கம்பம் நடும்போது சிறுவன் பலி! – கமல்ஹாசன் அறிவுறுத்தல் ட்வீட்!
கட்சி கொடிக்கம்பம் நடும்போது சிறுவன் பலியான சம்பவம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விழுப்புரத்தில், அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது தினேஷ் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.