1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:38 IST)

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: அதிமுக திட்டவட்டம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே முதல்வர் வேட்பாளர் யார்? யார் தலைமையில் கூட்டணி? என்ற பரபரப்பு இருந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது
 
சமீபத்தில் பேட்டியளித்த தமிழக பாஜக துணை தலைவர் விபி துரைசாமி பாஜக தலைமையிலான கூட்டணி அமையும் என்றும் தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்
 
இது குறித்து பதிலளித்த அதிமுகவின் வைகைச் செல்வன் அவர்கள் ’தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்றும் கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பை தமிழக மக்கள் இதுவரை உருவாக்கித் தரவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவருடன் ஒருவர் கருத்து வேறுபாடுகளால் மோதிக் கொள்வதால் வரும் தேர்தலில் இரு கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்