செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (14:02 IST)

தரைதட்டிய கப்பல் திமுக.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!!

தரைதட்டிய கப்பலாக உள்ளது திமுக என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து. 
 
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் சமீபத்தில் பாஜகவில் சேரப்போவதாக ஒரு வதந்தி கிளம்பியது. மேலும் கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக பிரமுகர்கள் சிலரை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. 
 
அதுமட்டுமின்றி டெல்லியில் இருந்து சென்னை வந்த பின்னரும் அவர் திமுக தலைவர் மீது குற்றம்சாட்டு கூறியதோடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சென்றார். இந்த நிலையில் கு.க.செல்வத்தை திமுக தலைமை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.   
 
இதனைத்தொடர்ந்து தற்போது கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல், திமுக தற்போது தரைதட்டிய கப்பலாக உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.