திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (14:39 IST)

”உங்களில் யார் அடுத்த அடிமை?” – கிடைக்கிற கேப்பில் கோல் போடும் உதயநிதி!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ளாமல் அதிமுக அரசு மெத்தனம் காட்டுவதாய் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சேலத்தில் முதியவர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது சரியான முடிவுகளை அளிக்காமல் மணி நேரத்திற்கு ஒரு முடிவை அளித்து குழப்பியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் இதுபோல தமிழகம் முழுவதிலும் பல குளறுபடிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ”இதுபோன்ற குளறுபடிகளை களைவது குறித்து சிந்திக்காமல் யாருக்குத் தொற்று வந்தால் நமக்கென்ன என்று உங்களில் யார் அடுத்த அடிமை போட்டி நடத்தும் எடுபிடிகள், மக்கள் உயிரோடு விளையாடுவது பேரவலம்!” என்று கூறியுள்ளார்

சமீபத்தில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிருத்தப்படுவார் என்ற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.