1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Niver cyclone in Tamil Nadu, heavy rain

தமிழகத்தில் கரையை கடக்கும் நிவர் புயல்: சென்னைக்கு பாதிப்பா?

நிவர் புயல்
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தென்மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு சமீபத்தில் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார்
 
பின்னர் இது புயலாக மாறும் என்றும் நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் நவம்பர் 25ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது
 
எனவே வரும் 25ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், ஆகிய பகுதிகளில் மிக கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது 
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த புயல் காரணமாக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையாகயும் இருந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண்களுக்கு அனுமதி: ஆனால் ஒரு நிபந்தனை!