போலி இ-பாஸ் தயாரித்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்: பரபரப்பு தகவல்
போலி இ-பாஸ் தயாரித்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெறவேண்டும் என்ற அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து வேறு மாவட்டம் செல்பவர்களுக்கு அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மருத்துவத் தேவை மற்றும் இறந்தவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் மட்டுமே சென்னையில் உள்ளவர்களுக்கு இபாஸ் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுவையிலும் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு போலி இ-பாஸ் தயாரிக்கப்படுவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அதிரடி சோதனை செய்தபோது காரைக்காலில் போலீசார் போலி இ-பாஸ் அச்சடிக்கும் கடை ஒன்றை நகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்
உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் அந்த கடையின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துதற்காக அமல்படுத்தபப்ட்டுள்ள இ-பாஸிலும் போலி தயாரிக்கும் நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது