தொடர்புடைய செய்திகள்
- வெயிட்டிங்கே வெறியாகுதே..! வலிமை அப்டேட் வருமா..? வராதா..? – கடுப்பாகி பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்!
- புயலில் இருந்து மக்களை காக்க ஒன்றிணைவோம்! - உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அழைப்பு!
- துரைமுருகனுக்கு திமுக தோக்கணும்னு ஆசை! – குண்டை தூக்கி போட்ட ஜெயக்குமார்!
- இன்றும் நாளையும் எங்கெங்கு அதீத கனமழை ?
- நகராமல் மையம் கொண்டுள்ள நிவர்; கரையை கடக்க தாமதமாகும் என தகவல்!
அதிதீவிர புயலாக மாறுகிறது நிவர்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிதீவிர புயலாக நிவர் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் வலுவடைந்துள்ளதால் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சுற்றுவட்டார மாவட்டங்களில் 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
