வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 ஜனவரி 2020 (07:47 IST)

மாமியார் வீட்டுக்குப் போன நபர் காரில் நிர்வாணப் பிணம் -நித்தியின் சீடருக்கு நேர்ந்த கொடூரம்!

பாண்டிச்சேரியில் பேக்கரி நடத்தி வந்த வஜ்ரவேலு என்பவர் கொலை செய்யப்பட்டு காரில் நிர்வாணமாகக் கிடந்ததை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பாண்டிச்சேரியில் உள்ள ஏம்பலம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேலு. இவர் இரு பேக்கரிகளை நடத்தி வருகிறார். நித்யானந்தா மேல் கொண்டிருந்த பக்தியால் இரு பேக்கரிகளுக்கு நித்யானந்தாவின் பெயரை வைத்துள்ளார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் செவ்வாய்கிழமை இரவு தனது பேக்கரியை மூடிவிட்டு குருவி நத்தம் எனும் பகுதியில் அமைந்துள்ள மாமியார் வீட்டிற்கு சென்று 2 லட்சம் ரூபாய் பணம் வாங்க செல்வதாக சொல்லி சென்றுள்ளார். அங்கு சென்று பணத்தை வாங்கிய அவர் அதன் பின் மாயமாகியுள்ளார். இது சம்மந்தமாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வஜ்ரவேலுவைத் தேட ஆரம்பித்துள்ளது காவல்துறை.

இந்நிலையில் குருவிநத்தம் பகுதிக்கு அருகாக அவரது கார் நிற்க, அதற்குள் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார் வஜ்ரவேலு. இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வஜ்ரவேலுவின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.