ஈகுவடாரில் இருந்து எஸ்கேப் ஆன நித்யானந்தா! – மத்திய அமைச்சகம் தகவல்
இந்திய அரசால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா ஈகுவடாரில் இல்லை என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடதியை தலைமை பீடமாக கொண்ட சாமியார் நித்யானந்தாவுக்கு இந்தியாவில் பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமங்களில் நித்யானந்தா குழந்தைகள் மற்றும் பெண்களை அடைத்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் குஜராத் ஆசிரமத்தில் உள்ள இருவர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக நித்யானந்தா சிஷ்யைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நித்யானந்தா மீது பல வழக்குகள் தொடரப்பட்டதால் கர்நாடகா மற்றும் குஜராத் போலீஸ் அவரை கைது செய்ய தேட தொடங்கினர். இந்நிலையில் நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை என்றும், ஈகுவடாரில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. எங்கே இருக்கிறார் என்பதை குறிப்பிடாமல் நாள்தோறும் தந்து சீடர்களுக்கு வீடியோ மூலம் பேசி வந்தார் நித்யானந்தா.
இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நித்யானந்தாவை பிடிக்க பல்வேறு நாடுகளிடமும் உதவி கோரியுள்ளது. ஈகுவடாரை தொடரொஉ கொண்டபோது நித்யானந்தா அங்கே இல்லை என்றும், அவர் வெளியேறிவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.