செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (12:24 IST)

எனக்கும் மானம், அவமானம் கிடையாது! - நித்யானந்தா ஓபன் டாக்!

என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் நான் பயப்பட மாட்டேன் என நித்தியானந்தா கூறியுள்ளார்.

சமீபகாலமாக நித்யானந்தா மீதும், அவர் ஆசிரமத்தின் மீதும் ஏகப்பட்ட புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. குஜராத் ஆசிரமத்தில் அவர் குழந்தைகளை அடைத்து வைத்த வழக்கில் போலீஸார் அவரை தேடி வருகின்றனர். அவரது குஜராத் ஆசிரமும் மாவட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்டுள்ளது. நித்யானந்தாவையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆனால் அவரோ தான் எங்கே இருக்கிறேன் என்பதையே சொல்லாமல் அடிக்கடி தன் சீடர்களுக்கு வீடியோவில் மட்டும் வந்து பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வீடியோ வெளியிட்ட நித்யானந்தா நாடு முழுவதும் பலர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும், யார் என்ன செய்தாலும் தான் பயப்பட போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்கக்கூடாது என்று பேசியுள்ள நித்யானந்தா தனது தனி தீவு குறித்த வேலைகளையும் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வளவு முறை வீடியோவில் வந்து பேசினாலும் தான் எங்கே இருக்கிறேன் என்பதை சொல்ல மாட்டேன்கிறாரே என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்களாம்.