1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (11:02 IST)

கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி; உபரி நீர் திறக்க வாய்ப்பு

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீரை நீரை திறந்துவிட வாய்ப்பிருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்நிலையில் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில் 22.3 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் ஏரியில் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.