தொடரும் வெங்காய திருட்டுகள்..! அதிர்ச்சியில் மக்கள்
பெரம்பலூரில் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரில் விவசாயி முத்துக்கிருஷ்ணன் என்பவர் 1500 கிலோ வெங்காயத்தை வாங்கி தனது தோட்டத்தில் பாதுகாத்து வைத்துள்ளார். இந்நிலையில் அவர் தோட்டத்திலிருந்து சுமார் 350 கிலோ சின்ன வெங்காயங்களை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முத்துக்கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் சின்ன வெங்காயத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருடு போன வெங்காயங்களின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.