வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (10:55 IST)

#Kailaasa: தேசத்தையே தன்னைப்பற்றி பேச வைத்த நித்தி!!

நித்தியானந்தா ஒரு தனித்தீவு வாங்கி இருப்பது தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 
 
நித்யானந்தா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள இந்து ஆன்மீக பக்தர்களால் ஆன்மீக குருவாக ஏற்கப்பட்டவர். இவர் பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் மடங்கள் வைத்துள்ளார். மேலும் பாடசாலைகள் பலவும் வைத்துள்ளார்.
 
நித்யானந்தா மீது சமீப காலமாக பாலியல் வன்முறை, சிறுமிகளை வசியம் செய்து வைத்திருப்பது போன்ற புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளார். 
 
தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில், #Kailaasa என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஊடங்கள் முதல் மக்கள் வரை அனைவரையும் தனித்தீவு ஒன்று வாங்கி நித்தியானந்தா திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். தனித் தீவுக்கு தனி பாஸ்போர்ட், தனிக்கொடி என அனித்தையும் உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.