திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (13:04 IST)

வானிலை மையம் அதிநவீனமானது.. முன்கூட்டியே முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது: நிர்மலா சீதாராமன்

சென்னை வானிலை மையம் அதிநவீனமானது என்றும் உரிய வானிலை முன்னெச்சரிக்கையை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்,

சற்றுமுன் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தபோது, ‘அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வானிலை ஆய்வு மையம் வழங்கியது என்றும், ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்,.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது என்றும், வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர் என்றும், தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்,


Edited by Mahendran