வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:21 IST)

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 2,500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 2,500 மோசடி கடன் செயலிகளை நீக்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டுத்தொடரில் மோசடி செயலிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மத்திய அரசு இணைந்து மோசடி கடன் செயலிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தெரிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் 2021 மற்றும் ஜீலை 2022 -க்கு இடைப்பட்ட காலத்தில் 4,000 கடன் செயலிகளின் உண்மை தன்மையானது ஆராயப்பட்டது.

அதில் 2,500 மோசடி கடன் செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் ரிசர்வ் வங்கி அங்கீகரித்த இந்தியாவின் சட்டப்பூர்வமான செயலிகளின் பட்டியலை கூகுள் நிறுவனத்திடம் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பகிர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த 2,500 போலி செயலிகள் நீக்கப்பட்டுள்ளன  என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.