திமுகவின் போலி பிரச்சாரம் எடுப்படவில்லை – மாஃபா பாண்டியராஜன்

mafa
Last Modified வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:13 IST)
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுகவின் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுகவின் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தைவிட 8296 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “திமுகவின் பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இது அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. இந்த வெற்றி தொடர்ந்து இடைத்தேர்தல்களிலும் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :