செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (15:20 IST)

கொரோனாவை ஒழித்த ஆட்சியருக்கு கொரோனா! – நீலகிரியில் பரபரப்பு!

நீலகிரி ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்த சமயத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அப்படியாக குறிப்பிடத்தகுந்த முயற்சிகளை மேற்கொண்டு நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியவர் இன்னசெண்ட் திவ்யா. இதற்காக தமிழக அரசின் பாராட்டையும் இவர் பெற்றார்.

இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவிற்கே கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.