புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (13:06 IST)

நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.