திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (08:56 IST)

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!!

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.