திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (07:26 IST)

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருவதை எடுத்து அந்த மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்றும் கல்லூரிகள் உட்பட மற்ற அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக உதகமண்டலம், குந்தா ஆகிய வட்டங்களில் நேற்றிரவு மிக கனமழை பெய்து வந்ததை எடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளன

இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளையும் பாதுகாப்பை கணக்கில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய இரண்டு வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

Edited by Siva