திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (07:21 IST)

இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும்: சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

Metro Train
இன்று சென்னையில் சனிக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் விடுமுறை நாட்களில் மட்டும் குறைவாக இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மொகரம் பண்டிகையை ஒட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் நெரிசல் மிகுந்த நேரமான காலை 8 மணி முதல் வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஆறு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை 11 மணி முதல் 5 மணி வரை ஏழு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும்  இன்று மொகரம் பண்டிகையை ஒட்டி வங்கிகளுக்கு விடுமுறை என்பதும் பங்குச் சந்தைக்கும் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva