செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 மே 2023 (14:17 IST)

நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சி தலைவர் அதிரடி அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
உள்ளூர் விசேஷங்கள் நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிப்பதை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்பதை தெரிந்ததே. 
 
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் அறிவித்துள்ளார். ஊட்டியில் நாளை 125 ஆவது மலர் கண்காட்சி நடைபெற இருப்பதை அடுத்து இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளைய மலர் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பார்க்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் மூன்றாம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சி தலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva