கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பதில் தாமதமா? பரபரப்பு தகவல்..!
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்ப அலை வீசி வருகிறது. எனவே அறிவித்தபடி ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோடை வெயில் தாக்கம் குறையாத பட்சத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து அதிகாரிகளுடன் நாளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
Edited by siva