1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 மே 2023 (07:51 IST)

பள்ளி பேருந்தை தானே இயக்கி ஆய்வு செய்த கலெக்டர்.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி..!

School bus
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் என்றும் பள்ளி பேருந்துகள் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்னர் பள்ளி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து வட்டார போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீரென பள்ளி வாகன வாகன ஆய்வு செய்யும் இடத்திற்கு வந்தார். அவருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களும் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி பேருந்தின் தரம் குறித்து முழுமையாக அறிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பள்ளி பேருந்து தானே இயக்கி பேருந்தும் தரம் குறித்து ஆய்வு செய்தார்

கலெக்டரே பேருந்துகளை ஓட்டி ஆய்வு செய்ததை பார்த்து அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் பொறுப்புடன் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் பள்ளி பேருந்துகள் விபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva