1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. husband and wife get collector post

ஒரே நேரத்தில் கணவன் - மனைவிக்கு கிடைத்த கலெக்டர் பதவி.. தமிழகத்தில் ஒரு ஆச்சரியம்..!

கணவன்
தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்ட நிலையில் அதில் இரண்டு பேர் கணவன் மனைவி என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஒரே நேரத்தில் கலெக்டர் பதவி கிடைத்த கணவன் மனைவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
நேற்றைய மாவட்ட கலெக்டர் இடமாற்றம் குறித்து அறிவிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளான விஷ்ணு சந்திரன் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராகவும் சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமனம் செய்து கொண்டனர் 
 
நேற்று நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் விஷ்ணு மற்றும் ஆஷா ஆகிய கணவன் மனைவி இருவருமே பக்கத்து பக்கத்து மாவட்ட கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கு முன் விஷ்ணு நகராட்சி நிர்வாகத்துறையிலும் ஆஷா அஜித் வழிகாட்டு குழுவின் பொறுப்பு இயக்குனராகவும் பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!