1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. NIA officers raid in 60 places

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!

NIA
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கார் சிலிண்டர் வெடிகுண்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தற்போது தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆகிய பகுதிகளில் உள்ள 60 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். 
 
சென்னையில் கொடுங்கையூர் மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. கோவையில் உக்கடம் குனியமுத்தூர் ஆகிய 15 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பான் - ஆதார் இணைப்புக்கு கடைசி வாய்ப்பு.. மத்திய அரசு எச்சரிக்கை..