திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2023 (16:02 IST)

பாகுபலி பட நடிகர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு

பாகுபலி பட நடிகர் ராணா மீது நில அபகரிப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகுபலி 1,2, நடிகர் அஜித்குமாருடன் ஆரம்பம், விஷ்ணு விஷாலுடன் இணைந்து காடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ராணா. தெலுங்கு சினிமாவின் முன்னணி  நடிகராக வலம் வரும் இவர்,.

இந்த நிலையில், பிரமோத் என்ற தொழிலதிபர்  நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஐதராபாத் பிலிம் நகரில் எனக்கு இடமுள்ளது,. அந்த இடத்தில் இருந்து காலி செய்யும்படி ராணாவும் அவரது தந்தை சுரேஷ் கோபியும் எனக்கு தொல்லைக் கொடுக்கிறார்கள்; இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, தெலுங்கானாவில் இவர் மீதும் இவர் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.