1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Next week election announcement for tamil nadu

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு எப்போது?

தமிழகம்
தமிழகத்தில் மே மாதம் புதிய ஆட்சி பதவி ஏற்க இருக்கும் நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக அதிமுக மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுவை அறிவித்து தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயாராகிவருகிறது 
 
அடுத்த வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஏப்ரல் இறுதியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் மே மாதம் முதல் வாரம் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது
அடுத்த கட்டுரையில்
சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடி வருமானம் உயரும் - அமைச்சர் கட்காரி