சூப்பர் ஸ்டாரின் படம் தியேட்டரில் ரிலீஸாக அனுமதி இல்லை !!

thriyam 2
Sinoj| Last Modified செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:29 IST)


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள த்ரிஷ்யம் 2 படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதியில்லை என கேரள பிலிம் சேம்பர் கூறியிருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்,மீனா நடிப்பில் உருவாகியுள்ள படம் த்ரிஷ்யம்

இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றிபெற்றதால் இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியாகி
வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில். தற்போது த்ரிஷ்யம் 2 படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இப்படம் வரும் 19 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. அதேசமயம் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய த்ரிஷ்யம் படக்குழு முடிவெடுத்துள்ளது.

மோகன்லால் ஓடிடியில் படம் வெளியான பின் தியேட்டரில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். ஆனால் கேரள பிலிம் சேம்பர் த்ரிஷ்யம் 2 படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதி மறுத்துள்ளது.

மேலும் இதுகுறித்து கேரள பிலிம் சேம்பர் கூறியுள்ளதாவது : ஓடிடியில் வெளியாகும் எந்தப் படத்தையும் நாங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கமுடியாது..இது சூப்பர் ஸ்டாருக்கும் புதுநடிகருக்கும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :