திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (19:32 IST)

நியூஸ் 18 குணசேகரனின் விளக்க அறிக்கை!

நியூஸ் 18 குணசேகரனின் விளக்க அறிக்கை!
கடந்த சில நாட்களாக் நியூஸ் 18 ஊடகத்தின் குணசேகரன் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக மெளனமாக இருந்த குணசேகரன் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
சமீப நாட்களாக தமிழகத்தில்‌ நடைபெறும்‌ அரசியல்‌ நிகழ்வுகள்‌ மூலம்‌ ஒரு தரப்பினர்‌ நியூஸ்‌ 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மீது ஒரு மோசமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்‌. மற்றொரு தரப்பினர்‌, அவர்கள்‌ ஆதாயம்‌ பெறும்‌ வகையில்‌ தங்களுக்கு ஆதரவாக தொலைக்காட்சி இயங்குகிறது என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கின்றனர்‌
 
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில்‌ எமது தொலைக்காட்சிக்கு ஆதரவாகவும்‌, எதிராகவும்‌ இடம்பெறும்‌ கருத்துக்கள்‌ (ட்ரெண்டுகள்‌), தொலைக்காட்சி விருப்பு வெறுப்பின்றி நடுநிலையாக  வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகின்றது என்பதற்கான சான்று
 
அனைவரது தரப்பு விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு, எங்களது அடிப்படை மதிப்பீடுகளை வலுப்படுத்த தயாராக இருக்கிறோம்‌. எங்களது தவறுகளை திருத்திக்கொள்ளவும்‌ நாங்கள்‌ தயக்கம்‌ காட்ட மாட்டோம்‌, தொழில்‌ நிபுணத்துவம்‌ பெற்றவர்கள்‌ தலைமையில்‌ இயங்கும்‌ நியூஸ்‌ 18 தமிழ்நாடு தொலைக்காட்சி எந்தவொரு பக்கச்‌ சார்புமின்றி அரசியல்‌ அவதூறு எல்லைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது
 
இடது, வலது அல்லது மைய கருத்துக்கள்‌ என அனைத்துத்‌ தரப்பினரது பார்வையையும்‌ பாகுபாடின்றி வெளியிடுவது, செய்தியாக்கம்‌ செய்வது என்பதில்‌ நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்‌
 
இவ்வாறு குணசேகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது