1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (18:24 IST)

திருமணமான ஒரே வாரத்தில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை: பெண்ணின் சகோதரர் தலைமறைவு

murder
திருமணம் ஆன ஒரே வாரத்தில் புதுமண தம்பதிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலை செய்த புது பெண்ணின் சகோதரர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கும்பகோணம் அருகே சரண்யா என்பவர் மோகன் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவருடைய சகோதரர் வேறு ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதனை அடுத்து சரண்யா சென்னையில் உள்ள தனது காதலரை திருமணம் செய்து கொண்டார் 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணன் சக்திவேல் உன்னுடைய நகைகள் வங்கியில் அடமானம் ஆக இருக்கிறது அதை நீ வந்தால் தான் விற்க முடியும் என சரண்யாவை ஊருக்கு அழைத்துள்ளார் 
 
இதனை நம்பி கணவருடன் வந்த சரண்யாவை அவருடைய சகோதரர் சக்திவேல் மற்றும் அவரை திருமணம் செய்ய இருந்த ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்