செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (17:33 IST)

வேறு பெண்ணுடன் தொடர்பு; காதலனை காரை ஏற்றிக் கொன்ற காதலி!

crime
அமெரிக்காவில் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்த காதலனை ஏர்டேக் மூலம் வேவு பார்த்து காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 26 வயது பெண் கெய்லின் மோரிஸ். இவர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் தனது காதலரின் நடவடிக்கையில் மோரிஸுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் ஆப்பிள் ஏர்டேக் என்னும் கருவியை பயன்படுத்தி நீண்ட நாட்களாக தன் காதலனை வேவு பார்த்து வந்துள்ளார் மோரிஸ். அப்படியாக அவரை பின் தொடர்ந்து அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மோரிஸ் கண்டறிந்துள்ளார். காதலன் தன்னை மோசடி செய்துவிட்ட ஆத்திரத்தில் காரை ஏற்றி அவரை கொலை செய்துள்ளார். ஏர்டேக் கொண்டு காதலைனை வேவு பார்த்து காதலியே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.