செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (17:55 IST)

40 வயது பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்-க்கு 3வது திருமணம்: மாப்பிள்ளைக்கு என்ன வயது?

britney marriage
40 வயது பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்-க்கு 3வது திருமணம்: மாப்பிள்ளைக்கு என்ன வயது?
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இன்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்
 
ஏற்கனவே கடந்த 2004ஆம் ஆண்டு ஒரு திருமணமும் 2007ஆம் ஆண்டு ஒரு திருமணம் செய்துகொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ் இரண்டு கணவரையும் விவாகரத்து செய்தார் அதில் முதல் கணவருடன் அவரும் 50 மணி நேரம் மட்டுமே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸின் 3வது திருமணம் நடந்தது. அவர் சில ஆண்டுகளாக காதலித்து வந்த அஸ்காரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் 
 
40 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் கணவர் அஸ்காரிக்கு 28 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்திற்கு பல ஹாலிவுட் பிரமுகர்கள் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்