1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cyclone cross near Chennai In evening

கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த மண்டலம்! – மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை!

Tamilnadu
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இன்று சென்னையில் கரையை கடந்து வருகிறது.

இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


 
அடுத்த கட்டுரையில்
சென்னையில் வரலாறு காணாத மழை!