ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (12:25 IST)

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

நாடு முழுவதும் நேற்று புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று அந்த சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னையில் நேற்று நடைபெற்ற செல்போன் பறிப்பு சம்பவத்தில் மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ்  தமிழகத்தில் பதிவு செய்யும் முதல் வழக்கு இது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
அசாம் மாநிலத்தில் இருந்து நேற்று சென்னைக்கு இரண்டு இளைஞர்கள் வந்த போது அவர்கள் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களை மிரட்டி இரண்டு பேர் செல்போன்களை பறித்து விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
 இந்த வழக்கு புதிய குற்றவியல் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் செல்போன் திருடர்கள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 புதிய குற்றவியல் சட்டத்திற்கு ஒரு பக்கம் முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்னொரு பக்கம் போலீசார் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran