திங்கள், 9 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (11:28 IST)

அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வது எப்போது?

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் இன்று அவர் சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆனால் அஜித்துக்கு தனிப்பட்ட முறையில் சில பணிகள் இருந்ததால் சென்னை திரும்பி இருப்பதாகவும் அந்த பணிகளை முடித்துவிட்டு அவர் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் அவர் அஜர்பைஜான்  செல்வார் என்றும் புறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டில் இதுவரை அஜித், ஆரவ் மற்றும் அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நாளை முதல் இந்த படப்பிடிப்பில் திரிஷா இணைய உள்ளதாகவும் அவருடைய காட்சிகளும் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அஜித் மட்டும் த்ரிஷா ஆகிய இருவரும் இந்த படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளதாகவும் அர்ஜுன் வில்லனாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிய இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva