1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (12:47 IST)

ஏப்ரலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் ஏப்ரல் 6ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக ஏப்ரல் 2 முதல் 5வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல பகுதிகளில் மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 6 முதல் வங்க கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தென்கிழக்கு பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.